BBC navigation

"மலையகத் தமிழர்களை ஒதுக்கிவிட்டு அரசியல் தீர்வு காண முடியாது"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 ஆகஸ்ட், 2014 - 17:15 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

மலையகத் தமிழர்களை ஒதுக்கிவிட்டு, இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைக் காண முடியாது என மலையக ஆர்வலர்கள் இந்தியாவிடம் தெரிவிப்பு

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

"மலையகத் தமிழர்களை ஒதுக்கிவிட்டு அரசியல் தீர்வு காண முடியாது"

00:04:43

மலையக மக்களின் 'லயம்' வீடுகள்

இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்னெடுக்கப்படும்போடு அதில் மலையகத் தமிழர்களின் பிரச்சினைகள் மற்றும் எண்ணங்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இந்தியத் தரப்பு தெரிவித்ததாக, மாவை சேனாதிராஜா அவர்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதேவேளை மலையகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும், சிவில் அமைப்பினரும், இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து தமது தரப்புக் கருத்துக்களை இந்தியத் தரப்பின் பல்மட்டங்களில் எடுத்துக் கூறியுள்ளனர்.

இருநூற்று ஆண்டு காலமாக இந்தியாவிலிருந்து கூலித் தொழிலாளர்களாக ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட, இந்திய மக்கள் தொடர்ந்தும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர் என்று அவர்கள் இந்தியத் தரப்பிடம் கூறியுள்ளனர்.

தொடரும் பேச்சுவார்த்தைகள்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் காலங்காலமாக அடிமைகளாக உள்ளனர்

எனவே இனப்பிரச்சினைக்கான நிரந்திர அரசியல் தீர்வு குறித்து பேசப்படும்போது, அதில் இந்திய வம்சாவளித் தமிழர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்று தமது தரப்பு, இந்தியாவிடம் கூறியதன் வெளிப்பாடே, கூட்டமைப்பிடம் இந்தியா தெரிவித்தக் கருத்துக்கள் என்கிறார் மலையகத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரும்,சமூக ஆர்வலருமான மூ. சிவலிங்கம்.

சில மாதங்களுக்கு முன்னர் அவ்வகையில் இந்தியத் தரப்புடன் தங்கள் குழுவினர் பேச்சுவார்த்தைகளை நடத்தினர் எனறும் பிபிசி தமிழோசையிடம் கூறினார் மூ. சிவலிங்கம்.

எனினும் இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதால், அது தொடர்பிலான விபரங்களை ஊடகங்களுக்கு இப்போது தெரிவிக்க இயலாது எனவும் அவர் கூறினார்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.