தரவிறக்க மாற்று வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

உயர்தரம் mp4 (5.8 எம்பி)
சாதாரண தரம் mp4 (1.2 எம்பி)

காணொளி: 41 பேரும் காலி நீதிமன்றத்தில் ஆஜர்

8 ஜூலை 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:53 ஜிஎம்டி

ஆஸ்திரேலியாவால் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட 41 பேரும் இன்று தென்னிலங்கையில் காலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களில் சிலர் குடிவரவு குடியகல்வு சட்டத்தின் பிரகாரம் இழைத்துள்ள குற்றங்களுக்காக வரும் 14ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

படகில் சாதாரண பயணிகளாகச் சென்ற ஏனையோர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

16 வயதுக்குட்பட்ட அனைத்து சிறார்களும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 41 பேரும் தங்களின் விண்ணப்பத்தை முன்வைக்க போதுமான அவகாசம் கொடுக்காமல், நடுக்கடலில் வைத்தே விசாரித்து அனுப்பிய நடவடிக்கையை ஐநாவின் மனித உரிமைகள் பேரவை விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.