BBC navigation

திருக்கேதீஸ்வரத்தில் தோண்டத் தோண்ட உடல் பகுதிகள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 ஜனவரி, 2014 - 18:35 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியிலுள்ள ஒரு புதைகுழியில் தோண்டத் தோண்ட உடல் பகுதிகள் கிடைத்து வருகின்றன. இது குறித்த ஒரு காணொளி.

பார்க்கmp4

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இலங்கையின் வடமேற்கே மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய சூழலில் மாந்தைசந்திக்கு அருகில் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியைத் தோண்டும் பணிகள் எட்டாவது தடவையாக வியாழனன்று மேற்கொள்ளப்பட்டபோது மேலும் நான்கு மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அனுராதபுரம் விசேட சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் தனஞ்ஜய வைத்தியரத்ன செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டவை தவிர்த்து, ஏற்கெனவே இருபத்தேழு மனித உடல்களுக்குரிய பாகங்கள் இதுவரை இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

"இருப்பினும் அந்த எண்ணிக்கை சரியானதா என்பது தெரியவில்லை. ஏனெனில் இந்த மனித புதைகுழி முழுமையாகத் தோண்டி முடிக்கப்படுவதற்கு முன்னர் சரியான எண்ணிக்கை குறித்த தகவல்களை என்னால் கூற முடியாது. புதைகுழியைத் தோண்டும் பணிகள் நாளையும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். திருக்கேதீஸ்வரம் ஆலயத் திருவிழாவுக்கு முன்னர் இந்தப் பணிகளை முடித்து, இந்த வீதியைப் பயன்படுத்துவதற்காகக் கொடுப்பதற்கு நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றோம்" என்றார் மருத்துவர் தனஞ்ஜய வைத்தியரத்ன.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.