BBC navigation

கவிஞர் ஜெயபாலன் குடிவரவு அதிகாரிகளின் பொறுப்பில் உள்ளார்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 நவம்பர், 2013 - 17:03 ஜிஎம்டி

கவிஞர் ஜெயபாலன் சுற்றுலா வீசாவில் வந்து 'இன ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் செயற்பட்டதாக' குற்றச்சாட்டு

இலங்கைக் காவல்துறையினரால் நேற்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ்க் கவிஞரும் நடிகருமான ஜெயபாலன் தற்போது குடிவரவு, குடியகல்வுத் துறை அதிகாரிகளின் பொறுப்பில் இருப்பதாக காவல்துறை பேச்சாளர் எஸ்எஸ்பி அஜித் ரோஹண பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

காவல்துறையினரால் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி இன்று கொண்டுசெல்லப்படும் வழியில் வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசிய கவிஞர் ஜெயபாலன், தான் விசாரணைகளின் முடிவில் நோர்வேக்கு அல்லது இந்தியாவுக்கே செல்ல விரும்புவதாகக் கூறியிருந்தார்.

சுற்றுலா வீசாவில் நாட்டுக்குள் வந்து குடிவரவுச் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டிலேயே இலங்கை காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தன்னைக் கைதுசெய்துள்ளதாக ஜெயபாலன் கூறியுள்ளார்.

நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் பசீர் சேகுதாவூத் உள்ளிட்ட தரப்பினர் தன்னோடு தொடர்புகொண்டு பேசியதாகவும் அவர் கூறினார். அவர்கள் தனது விடுதலைக்காக அதிகாரிகளுடன் பேசிவருவதாகவும் ஜெயபாலன் தெரிவித்தார்.

இதனிடையே இதுதொடர்பில் பிபிசி தமிழோசையிடம் பேசிய அமைச்சர் பசீர் சேகுதாவூத், ஜெயபாலனிடம் குடிவரவுத்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் அவர் கொழும்பு மிரிஹானையிலுள்ள குடிவரவுச் சட்ட விதிகளை மீறுவோரை தடுத்துவைத்திருக்கும் முகாமில் தற்போது உள்ளதாகவும் தெரிவித்தார்.

அவரை பிரச்சனைகள் இன்றி நாட்டிலிலிருந்து அனுப்பிவைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாகவும் அமைச்சர் பசீர் சேகுதாவூத் தமிழோசையிடம் கூறினார்.

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.