ஆர்வம், அதிகாரம், எதிர்பார்ப்பு

21 செப்டம்பர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 15:18 ஜிஎம்டி

இலங்கையின் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் மக்கள் ஆர்வமாக வாக்களித்தர். அமைதியாக தேர்தல்கள் நடைபெற்றதாகவும் தகவல்கள்.
வட மாகாண சபைக்கான தேர்தல் முடிவடைந்த பிறகு வாக்குப் பெட்டிகள், எண்ணிக்கை மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப் பெட்டிகளை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
வாக்குப் பெட்டிகளை எடுத்துச் சென்ற அரச வாகனங்கள்.
வாக்குப் பதிவுக்கு பிறகு பெட்டிகளை எடுத்துச் செல்லும் அதிகாரிகள்.
வாக்குப் பதிவின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
பெரும்பாலும் அமைதியாகவே வாக்குப்பதிவு இடம்பெற்றதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
வட மாகாண சபைக்கான முதல் தேர்தலில் வாக்களிக்க காத்திருக்கும் யாழ் மக்கள்.
தேர்தல் தினத்தன்று, வாக்குப்பதிவு மையத்தின் அருகில் ஒட்டப்பட்டிருந்த தேர்தல் சுவரொட்டியை அகற்றும் காவல்துறையினர்-இடம் வடமேல் மாகாணம்.
முதியவர்களும் ஆர்வமாக வாக்களிக்க வந்தனர்.
வாகனச் சோதனைகளும் தீவிரமாக இடம்பெற்றது.
வாக்களிப்பில் மகளிரிடையேயும் பெரும் ஆர்வம் இருந்தது.
ஆவணங்கள் சரிபார்க்கப்படுகின்றன.
வாக்களித்ததன் அடையாளமான சுண்டுவிரலில் மை வைக்கப்பட்டது.
வட மாகாணத் தேர்தலில் வாக்களிக்க ஆர்வமாக காத்திருந்த மக்கள்.