BBC navigation

'தேசத்திற்கு மகுடம் சூட்டிய எமக்கு முள்கிரீடம் சூட்டுவதா?'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 மார்ச், 2013 - 16:43 ஜிஎம்டி
போர் வெற்றிக் கொண்டாட்ட மேடையில் மகிந்த ராஜபக்ஷ ( கோப்புப் படம்)

போர் வெற்றிக் கொண்டாட்ட மேடையில் மகிந்த ராஜபக்ஷ ( கோப்புப் படம்)

ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் தமக்கு முள் கிரீடம் சூட்டுவதற்கான முயற்சி என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் மரண பயத்துடன் வாழ்ந்த மக்கள் தற்போது சுதந்திரமாக வாழ்வதற்கு வழியமைத்துக் கொடுத்து தேசத்தின் மகுடம் சூட்டிய தமக்கு முள் மகுடம் சூட்டுவதற்கு ஜெனீவாவில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மகிந்த ராஜபக்ஷ கூறினார்.

தேசிய நிகழ்வான தேசத்துக்கு மகுடம்-2013 கண்காட்சியை அம்பாறையில் திறந்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி மகிந்த இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இங்கு உரையாற்றும்போது சிறிதுநேரம் தமிழிலும் மகிந்த ராஜபக்ஷ உரையாற்றினார்.

தேசத்துக்கு மகுடம் நிகழ்வின் மூலம் கிழக்கு மாகாணம் மேலும் முன்னேற்றமடையும் என்றும் அவர் கூறினார்.

மக்கள் பொய் பிரச்சாரங்களை நம்பக்கூடாது என்றும் ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தை நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி திறந்துவைத்தமை குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.