இலங்கை மீது புதிய தீர்மானம் கொண்டுவரப்படும்: அமெரிக்கா

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 ஜனவரி, 2013 - 16:35 ஜிஎம்டி
மார்ச் மாதம் மனித உரிமை பேரவைக்கு அமெரிக்காவின் தீர்மானம் வருகிறது.

மார்ச் மாதம் மனித உரிமை பேரவைக்கு அமெரிக்காவின் தீர்மானம் வருகிறது.

ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவரவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

போர்க்கால குற்றங்கள் தொடர்பில் இலங்கைப் படையினர் மீது விசாரணை நடத்த வேண்டுமென்று இலங்கை அரசைப் பலவந்தப்படுத்தும் நோக்கோடு இந்த தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அமெரிக்கா உயர்மட்ட இராஜதந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ஜேம்ஸ் மூர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த தடவை ஜெனீவா தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, அமெரிக்காவும் 23 நாடுகளும் இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.