BBC navigation

இலங்கையின் புதிய தலைமை நீதியரசராக மொஹான் பீரீஸ் பதவியேற்றார்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 ஜனவரி, 2013 - 09:53 ஜிஎம்டி
புதிய தலைமை நீதிபதியாக மொஹான் பீரிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

புதிய தலைமை நீதிபதியாக மொஹான் பீரிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

இலங்கையின் புதிய தலைமை நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபரும் அரசாங்கத்தின் மூத்த சட்ட ஆலோசகருமான மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமை நீதியரசர் பதவியில் இருந்து ஷிராணி பண்டாரநாயக்க அரசாங்கத்தின் கண்டன பதவிநீக்க நடைமுறையின் கீழ் சென்ற வாரம் அகற்றப்பட்டதை அடுத்து புதிய தலைமை நீதியரசராக மொஹான் பீரிஸ் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.

சட்டத்தரணிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் மொஹான் பீரிஸ் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ள சூழ்நிலையில், நாட்டின் உச்சநீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, ஷிராணி பண்டாரநாயக்க அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.