BBC navigation

ஷிராணியைப் பதவி நீக்கினார் ஜனாதிபதி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 13 ஜனவரி, 2013 - 10:25 ஜிஎம்டி
ஷிராணி பண்டாரநாயக்க

ஷிராணி பண்டாரநாயக்க

மக்கள் மனநிலை என்ன?

தலைமை நீதியரசர் பதவிநீக்கம்: மக்கள் மனநிலை

தலைமை நீதியரசர் பதவிநீக்கம் தொடர்பில் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு வாழ் தமிழ் பேசும் மக்களின் கருத்துக்கள்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இலங்கையின் தலைமை நீதியரசர் பதவியிலிருந்து ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்து நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

ஷிராணிக்கு எதிராக அரசாங்கம் கொண்டுவந்திருந்த கண்டன பதவிநீக்கத் தீர்மானத்தை ஆதரித்து நாடாளுமன்றம் வாக்களித்து ஓரிரு நாட்களில் ஜனாதிபதியின் இந்த உத்தரவு வருகிறது.

ஷிராணியை பொறுப்பிலிருந்து அகற்றும் உத்தரவில் ஞாயிறு காலை ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளதாக அவருடைய அலுவலகம் பிபிசியிடம் தெரிவித்தது.

இந்த உத்தரவு கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவிடம் கிடைத்துவிட்டதாக அவருக்கு நெருக்கமான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த உத்தரவு குறித்து உடனடியாக கருத்து வெளியிடுவதற்கு ஷிராணி மறுத்துவிட்டார்.

கண்டன பதவிநீக்க நடைமுறையில் முறைகேடுகள் இருக்கின்றன என்றும், இது சட்டத்துக்கு புறம்பானது என்றும் நாட்டின் உச்சநீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ள நிலையில், தலைமை நீதியரசர் பொறுப்பிலிருந்து அகல ஷிராணி மறுக்கவும் வாய்ப்புள்ளது.

"நீதித்துறை சம்பந்தமாக அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை மக்கள் ஆதரிக்க வேண்டும்" என்று ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.