மனித உரிமை நிலவரம்: இலங்கைக்கு கனடா எச்சரிக்கை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 ஜனவரி, 2013 - 16:24 ஜிஎம்டி
கனடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி

கனடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி

இலங்கையின் மனித உரிமைகள் சூழ்நிலையில் திருப்தியளிக்கக்கூடிய முன்னேற்றங்கள் ஏற்படாவிட்டால், இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதை கனடியப் பிரதமர் ஸ்டீஃபன் ஹார்ப்பர் தவிர்ப்பார் என்பதை இலங்கையிடம் தான் தெளிவுபடுத்தியிருப்பதாக இலங்கை வந்துள்ள கனடிய குடிவரவுத்துறை அமைச்சர் ஜேசன் கென்னி கூறியுள்ளார்.

இலங்கையில் யுத்தத்துக்கு பின்னருங்கூட மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் நீடிப்பதாக கனடா உணர்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜேசன் கென்னி

ஆங்கிலத்தில்...

கனடிய அமைச்சர் ஜேசன் கென்னடி கருத்து

இலங்கை வந்துள்ள கனடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னடி செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துகள். ஆங்கில ஒலிக் கீற்று.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

"இலங்கையிலிருந்து ஆட்கள் ஆஸ்திரேலியா கனடா போன்ற நாடுகளில் சென்று குடியேறும் ஆசையில் பெரும் பணம் செலவழித்து சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பல்களிடம் தொடர்ந்தும் சிக்குகிறார்கள் என்றால், அவர்களை அந்த நிலைக்கு தள்ளுகின்ற ஒரு அரசியல் சூழல் இலங்கையில் நிலவத்தான் செய்கிறது என்பது எமக்குப் புரிகிறது" என்று கனடிய குடிவரவுத்துறை அமைச்சர் ஜேசன் கென்னி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நீடிக்கும் மனித உரிமை மீறல்கள் என்று நாங்கள் கருதும் விஷயம் தொடர்பாகவும், அரசியல் நல்லிணக்கம் ஏற்படுத்துவதில் முன்னேற்றம் இல்லாதிருப்பது தொடர்பாகவும், யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் நடந்த குற்றங்களுக்கு சம்பந்தப்பட்டவர்களை பதில் சொல்ல வைப்பதில் விடப்பட்டுள்ள பிழைகள் தொடர்பாகவும் கனடாவுக்கு ஆழமான கவலைகள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

யுத்த காலத்திலும் பார்க்க இலங்கையிலிருந்து வெளிநாடுகளில் சென்று குடியேற சட்டவிரோதமாக முயலுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

"இலங்கையில் யுத்தம் நடந்த காலத்தில் சட்டவிரோத ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுத்து வெளியேற முயன்றவர்களைவிட தற்போது அதிகம் பேர் அவ்வாறு வெளியேற முயலுகின்றனர் என்ற விவரம் தமக்கு கவலையை ஏற்படுத்துகிறது" என அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்தார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.