'மாணவர் போராட்டங்களை நசுக்கவே தலைமைத்துவப் பயிற்சி'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 ஜனவரி, 2013 - 17:22 ஜிஎம்டி
பல்கலைக்கழகங்கள் அரசியல் மற்றும் இராணுவ மயப்படுத்தப்படுவதாக மாணவர்களும் ஆசிரியர்களும் கடந்த காலங்களில் பல போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

பல்கலைக்கழகங்கள் அரசியல் மற்றும் இராணுவ மயப்படுத்தப்படுவதாக மாணவர்களும் ஆசிரியர்களும் கடந்த காலங்களில் பல போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இலங்கையில் பல்கலைக்கழகம் செல்லவுள்ள மாணவர்களுக்காக பல்கலைக்கழகங்களுக்கு வெளியே கொடுக்கப்படுகின்ற தலைமைத்துவப் பயிற்சி விவகாரம் தொடர்ந்தும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.

பாதுகாப்பு அமைச்சு சம்பந்தப்பட்டுள்ள இந்த பயிற்சி நாட்டின் கல்வி நிலையங்களை இராணுவ மயமாக்கலின் கீழேயே முன்னெடுக்கும் திட்டத்தின் ஓர் அங்கமே என்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ பண்டார பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

பல்கலைக்கழக மாணவர்களை இராணுவத்தைப் போன்று கட்டளைகளுக்கு அடிபணியச் செய்யும் நோக்குடத்துடனேயே அரசாங்கம் இந்தப் பயிற்சியைக் கொடுப்பதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டுகிறது.

'அடிபணியும் சமூகத்தை உருவாக்க முயற்சி' : பி. ரிச்சர்ட்

ஜனாதிபதியின் மகன் மட்டும்தான் அரசியலில் ஈடுபட முடியுமா?

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கருத்து.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

'மாணவர்களின் போராட்டங்களை நசுக்கும் வேலை'

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபடுவதை தடுக்கும் அரசியல் நோக்கம் இந்தத் திட்டத்தில் இருப்பதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் சம்மேளனத்தின் பிரதிநிதி பி.ரிச்சர்ட் தமிழோசையிடம் கூறினார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கு உள்ளேயே விரிவுரையாளர்களைக் கொண்டு தலைமைத்துவப் பயிற்சி கொடுக்க முடியும் என்கின்ற போதிலும் இராணுவ முகாம்களில் இராணுவத்தினரைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுவதில் அரசாங்கத்துக்கு உள்நோக்கம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மூன்று வாரகாலம் கொடுக்கப்படும் இந்தப் பயிற்சி மூலம் பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடுகளை மழுங்கடிக்கும் வேலைகளே முன்னெடுக்கப்படுவதாகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் சம்மேளனம் குற்றஞ்சாட்டுகிறது.

இலங்கையில் நாட்டின் பலபகுதிகளிலும் உள்ள 23 நிலையங்களில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன.

இங்கு கொடுக்கப்படும் பயிற்சிகள் மாணவர்களின் முன்னேற்றத்துக்கானவையே என்று நாட்டின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.