இலங்கை:மழை வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்வு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 20 டிசம்பர், 2012 - 18:25 ஜிஎம்டி

இலங்கையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த சில தினங்களாக பத்து மாவட்டங்களில் பெய்து வரும் மழையின் சீற்றம் குறைந்திருந்தாலும் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன என தகவல்கள் கூறுகின்றன.

நீரால் சூழப்பட்ட சிலாபம் மருத்துவமனை

மேற்கே புத்தளம் மாவத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கின் காரணமாக எட்டாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

சிலாபம் மருத்துவமனையில் மழை நீர் புகுந்ததால் பெரும் சேதங்கள் ஏற்பட்டு அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த நூற்றுக்கணக்கான நோயாளிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

அந்த மருத்துவமனையில் அன்றாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனினும் அந்த மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என்று அங்கிருக்கும் செய்தியாளர் முஸாஃபிர் கூறுகிறார்.

மட்டக்களப்பு உட்பட பல மாவட்டங்களில் மழையின் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய பலர் தமது வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறுகிறார்.

இந்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக காணாமல் போனதாகக் கூறப்படும் 13 பேரின் நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.