வடக்கு நிலைமைகளை கண்டித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 டிசம்பர், 2012 - 16:54 ஜிஎம்டி
வடக்கு கிழக்கில் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து தமிழ்க் கட்சிகள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன.

வடக்கு கிழக்கில் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது நடவடிக்கைகளை கண்டித்தும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் வடக்கு கிழக்கில் படையினர் நிலத்தை ஆக்கிரமிப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறியும் வவுனியா நகரில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சில முற்போக்கு அரசியல் சக்திகளுடன் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தன.

ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள கூட்டங்களின்போது இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு கிழக்கில் மக்களின் வாழ்வாதாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் மாணவர்களை உடனடியாக அரசு விடுதலை செய்யவேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பலரும் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை, யாழ். பல்கலைக் கழகத்தில் சமீபத்தில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து மாணவிகள் சிலர் காவல்துறையால் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் சுன்னாகம், கந்தரோடை பகுதியில் யாழ்.பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முதலாம் ஆண்டு கலைப்பிரிவைச் சேர்ந்த இந்த மாணவியின் மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

இந்த மரணத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் கிடைக்கப்படவில்லை.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.