'மாகாணசபையை ஒழிக்க இந்தியா உடந்தை': தமிழ் எம்.பி. குற்றச்சாட்டு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 13 நவம்பர், 2012 - 18:02 ஜிஎம்டி
தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.சரவணபவன்

தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.சரவணபவன்

இந்திய அரசின் ஆதரவுடனேயே இலங்கையின் 13-ம் அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இலங்கையின் ஆட்சியாளர்கள் முயன்றுவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி 1987-ம் ஆண்டில் இலங்கையில் மாகாணசபை முறைமையை கொண்டுவந்த 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை இல்லாது செய்துவிட இலங்கை அரச மட்டத்தில் பல்வேறு முயற்சிகள் நடந்துவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

மாகாணசபை முறையை ஒழித்துவிடவேண்டும் என்ற தொனியில் ஜனாதிபதியின் சகோதரர்கள் உட்பட அரசின் உயர்மட்ட பிரமுகர்கள் பலரும் அண்மைக் காலங்களில் கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர்.

சரவணபவன் எம்.பி.

'இந்தியா தான் ஜனாதிபதியின் துணிச்சலுக்கு காரணம்'

மாகாணசபை முறையை மாற்றவேண்டும் என்று பட்ஜட் உரையில் ஜனாதிபதி மகிந்த கூறியதன் பின்னணியில் இந்தியாவின் உடந்தையும் இருக்கிறது என்று தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தமிழோசையிடம் கூறினார்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

மாகாணசபையின் நிதி அதிகாரங்களை மத்திய அரசு கையேற்கும் படியான திவிநெகும சட்டமூலத்தையும் நிறைவேற்ற அரசு முயற்சி செய்துவருகின்றது.

இந்த நிலையில், அண்மையில் வரவுசெலவுத் திட்ட உரையை ஆற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் மாகாணசபை முறையை மாற்றியமைக்கவேண்டும் என்றும் இந்த முறை நாட்டு மக்களை பிளவுபடுத்த இடமளிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய உயர்மட்ட அதிகாரிகளுடன் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய உயர்மட்ட அதிகாரிகளுடன் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்படியாக 13வது அரசியலமைப்பு திருத்தத்தை மாற்றுவதற்கு அரச உயர்மட்டத்தில் பகிரங்கமாக முயற்சிகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், அதனை அங்கீகரிப்பது போல இந்தியா மௌனம் காப்பது இந்தியா அதற்கு ஆதரவளிக்கிறது என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஓர் அங்கமான இணைந்த வடக்கு கிழக்கு பிராந்தியம் பிரிக்கப்பட்டபோதும் இந்தியா மௌனமாக இருந்ததையும் அவர் தெரிவித்தார்.

வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தின்போதும் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் இந்தியாவைக் கண்டித்து பேசியிருந்தார்.

இதேவேளை, இலங்கையில் 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை மையமாகக் கொண்டே அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று இந்தியா பல தடவைகள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.