BBC navigation

செல்வம் எம்.பி.யின் மைத்துனர் சடலம் அடையாளம் காணப்பட்டது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 3 நவம்பர், 2012 - 13:17 ஜிஎம்டி
சின்னத்துரை இந்திரேஸ்வரன் (53வயது) கடந்த செவ்வாய்க்கிழமை காணாமல்போனார்.

சின்னத்துரை இந்திரேஸ்வரனை (53 வயது) கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணவில்லை என்று முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த 30-ம் திகதி கொழும்பில் வைத்து மர்மமான முறையில் காணாமல்போயிருந்த சின்னத்துரை இந்திரேஸ்வரனின் சடலம் வெள்ளிக்கிழமை காலை நுவரெலியாவிற்கு அருகில் நானுஓயா என்ற இடத்தில் மரக்கிளை ஒன்றில் சிக்கியிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிசாரால் நுவரெலியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த இந்த சடலத்தை இறந்தவரின் சகோதரரும் அவரது மைத்துனரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் அடையாளம் காட்டியுள்ளனர்.

35 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையடிப்பதற்காக கொழும்பிலிருந்து சின்னத்துரை இந்திரேஸ்வரனை கடத்திச் சென்ற கோஷ்டி ஒன்று, அவரைக் கொன்று சடலத்தை தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதியிலிருந்து பள்ளத்தை நோக்கி வீசப்பட்டிருந்த சடலம் மரக்கிளையில் சிக்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் சிலர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்ப விசாரணையின் பின்னர் சடலம் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியாவிலிருந்து அதை தாங்கள் கொழும்பிற்கு எடுத்துச் சென்று கொண்டிருப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான மேல் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.