BBC navigation

துணையமைச்சுப் பதவியை துறந்தார் பசீர் சேகுதாவூத்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 ஆகஸ்ட், 2012 - 14:33 ஜிஎம்டி
'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும்போது அமைச்சுப் பதவிகளை வகிப்பது மனசாட்சியை உறுத்தியது': பஷீர் சேகு தாவூத்

'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும்போது அமைச்சுப் பதவிகளை வகிப்பது மனசாட்சியை உறுத்தியது': பஷீர்

கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை துணை அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனது கட்சியின் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு வசதியாகவே தான் வகித்த துணையமைச்சுப் பதவியை விட்டு விலகியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தான் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியை பெறுவதற்கு முயற்சிக்கப்படுவதாக தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டதால் அதற்கு பதில் கூறுவதற்காகவே தனது அமைச்சுப் பொறுப்பை துறந்துள்ளதாகவும் முன்னாள் கூட்டுறவுத் துறை துணையமைச்சர் பசீர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் அமைச்சுப் பதவியை வகித்துக்கொண்டே கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதற்கு தனது மனசாட்சி இடமளிக்கவில்லை என்றும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்தும் அரசாங்கத்தில் நீதியமைச்சராக பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.