BBC navigation

மலையகம், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் சிறார் தொழிலாளர்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 ஜூன், 2012 - 18:25 ஜிஎம்டி
இலங்கையில் சிறார் தொழிலாளர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற புள்ளிவிபரங்கள் அரசிடம் இல்லை

'இலங்கையில் சிறார் தொழிலாளர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற புள்ளிவிபரங்கள் அரசிடம் இல்லை'

இலங்கையில் மலையகம் மற்றும் வடக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக சிறார் நலத்துறை துணையமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவிக்கின்றார்.

மலையகத்தைச் சேர்ந்த சிறார்கள், குறிப்பாக பெண்பிள்ளைகள் தரகர்கள் மூலம் நகர்ப்புறங்களுக்கு வீட்டுவேலைகளுக்காக கொண்டுவரப்பட்டு பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் துணையமைச்சர் ஹிஸ்புல்லா தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கிளிநொச்சியிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் நோக்கில் பதுளை பிரதேசத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட சிறார்கள் 11 பேரை சிறார் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மீட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

துணையமைச்சர் ஹிஸ்புல்லா

சிறார் தொழிலாளர்கள் பற்றி அமைச்சர் ஹிஸ்புல்லா

இலங்கையில் மலையகம் மற்றும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த சிறார்கள் நகர்ப்புறங்களுக்கு வேலைக்காக கொண்டுசெல்லப்படுகின்றனர்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

'அரசிடம் புள்ளிவிபரம் இல்லை'

இவ்வாறான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மக்கள் உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறார் நலத்துறை துணையமைச்சர் தெரிவித்தார்.

ஆனால், நாட்டில் சிறார் தொழிலாளர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்பது தொடர்பான புள்ளிவிபரங்கள் எதுவும் அரசின் வசம் இல்லை என்று கூறிய அமைச்சர் ஹிஸ்புல்லா, ஆனால் ஒப்பீட்டளவில், தெற்காசிய நாடுகளில் இலங்கையில் சிறார் தொழிலாளர்கள் குறைந்தளவில் தான் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை தடுப்பதற்கு சட்டத் திருத்தங்கள் தேவைப்படுவதாகவும் அதுகுறித்து அரசு கவனம் செலுத்திவருவதாகவும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சிறார்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் முன்னணி பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 2000 பேர் அளவில் கலந்துகொண்டார்கள்.

இந்த நிகழ்வுகளில் சிறார் நலத்துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவும் துணையமைச்சர் ஹிஸ்புல்லாவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.