BBC navigation

'வடக்கு பெண்களின் அவலங்கள் தொடருகின்றன' - உதவி அமைப்புக்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 மே, 2012 - 16:05 ஜிஎம்டி
போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர்

போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர்

இலங்கையில் இறுதிப் போர் முடிவடைந்து மூன்று வருடங்களாகின்ற போதிலும், போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் இன்னும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். வாழ்வாதாரம், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களில் அவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என்று பெண்கள் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

''யுத்தத்தில் கணவனை இழந்தும், கணவன்மார் தடுப்பில் இருப்பதனாலும், பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டியவர்களாகவும், குடும்பச் சுமையைத் தாங்க வேண்டியவர்களாகவும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் இருக்கின்றார்கள். இவர்களின் வாழ்வாதாரத்திற்கு நிறுவனங்கள் பல்வேறு உதவிகளைச் செய்துள்ள போதிலும் இந்த உதவிகள் ஒரே மாதிரியானதாகவும், சமூக சூழலுக்குப் பொருத்தமற்றதாகவும் இருக்கின்றன. இதனால் இந்த உதவிகள் உரிய பயனை அளிக்கவில்லை'' என மன்னார் பெண்கள் அபிவிருத்தி நிலையம், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான பெண்கள் அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த ஷெரின் ஷரூர் கூறுகின்றார்.

'கடன் சுமை சில போர் விதவைகளை பாலியல் தொழிலுக்கும் தள்ளுகிறது'

கடன்சுமையும், சுற்றவரவுள்ள சில அழுத்தங்களும் போர் விதவைகள் சிலரை பாலியல் தொழிலுக்கு தள்ளியுள்ளதாக வட இலங்கை சமூக சேவகியான ஷெரீன் சரூர் தெரிவித்துள்ளார்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

தோல்வியடைந்த வாழ்வாதாரத் திட்டங்களினால் கடனாளிகளாகியுள்ள பெண்கள் அதிலிருந்து மீள்வதற்கு வேறு பல்வேறு தொழில்களைச் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள் என்றும் இதனால் அவர்களில் சிலர், பாலியல் தொழிலுக்குள் வலிந்து தள்ளப்படுகின்ற அளவிற்கு மோசமான நிலைமைக்கு ஆளாக நேரிட்டுள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

இதற்கு சமூக அமைப்பு, பெண்கள் தொடர்பான சமூகத்தின் சிந்தனை, அதன் போக்கு, அணுகுமுறை என்பனவும் காரணமாக இருக்கின்றன என்று ஷெரின் சரூர் குறிப்பிடுகின்றார்.

இத்தகைய பெண்களுக்குப் புனர்வாழ்வளித்து நல்வழிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பெண்கள் அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றன.

இவை குறித்த அவரது செவ்வி அடங்கிய செய்தித்தொகுப்பை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.