bbc.co.uk navigation

இலங்கையில் பாணின் விலை அதிகரிப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 24 பிப்ரவரி, 2012 - 10:10 ஜிஎம்டி
உணவுப்பொருள் விலையேற்றத்தை கண்டித்த போராட்டம் ஒன்றின் போது பிடிக்கப்பட்ட படம்

உணவுப்பொருள் விலையேற்றத்தை கண்டித்த போராட்டம் ஒன்றின் போது பிடிக்கப்பட்ட படம்

இலங்கையில் மக்களின் அன்றாட முக்கிய உணவுகளில் ஒன்றாகக் கருதப்படும் பாணின் விலை நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை 50 ரூபாவாக இருந்துவந்த 450 கிராம் பாணின் விலை 55 ரூபாவாக அதிகரிக்கிறது.

எரிபொருள் விலை அதிகரிப்பால் ஏற்பட்ட உற்பத்திச் செலவு அதிகரிப்பே இந்த விலையேற்றத்துக்கு காரணம் என்று பேக்கரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

எரிபொருள் விலையேற்றத்தால் போக்குவரத்து துறை உட்பட பல துறைகள் இலங்கையில் சிரமத்தை எதிர்நோக்கும் நிலையில் பேக்கரி உரிமையாளர்களின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.