
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர்
இலங்கையில் எரிபொருட்களின் விலையேற்றத்தை ஆட்சேபித்து எதிர்க்கட்சிகளினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்திருக்கிறார்கள்.
பெட்ரோல் விலையேற்றம் குறித்து பாலகிருஷ்ணன் செவ்வி
பெட்ரோல் விலையேற்றத்தால் ஏற்பட்ட பிரச்சினைக்கு அரசாங்கத்தின் முகாமைத்துவ குறைபாடே காரணம் என்கிறார் ஆய்வாளர் எஸ். பாலகிருஷ்ணன்.
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
இன்று பிற்பகல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஐக்கிய தேசியக் கட்சி, மேல்மாகாண மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல எதிர்க்கட்சிகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.
அதனை அடுத்து அங்கிருந்து கோட்டை தொலைபேசி அலுவலகத்தை நோக்கி இவர்கள் ஊர்வலமாகச் செல்ல முயற்சித்த போது அவர்களை பொலிஸார் தடுத்தனர்.
அதனையடுத்த இழுபறியின் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் செய்தார்கள்.
இதனையடுத்து கலைந்து ஓடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் கூடி முன்னேற முயன்றபோது அவர்கள் மீது மீண்டும் பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோக செய்தனர்.

இந்த இழுபறியில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன காயமடைந்ததாக அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.








