bbc.co.uk navigation

எரிபொருள் விலை: சூடுபிடிக்கும் மீனவர் போராட்டம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 பிப்ரவரி, 2012 - 16:52 ஜிஎம்டி
வடமேல் கரையை அண்டிய மீனவர்கள் கடலுக்குப் போகாது கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினார்கள்

வடமேல் கரையை அண்டிய மீனவர்கள் கடலுக்குப் போகாது 'கறுப்புக் கொடி போராட்டம்' நடத்தினார்கள்

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களுடன் இணைந்து அகில இலங்கை மட்டத்தில் மீனவர்களின் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக வட இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே போரி்னால் பாதிக்கப்பட்டிருந்து, படிப்படியாக மீன்பிடித் தொழிலை முன்னெடுக்க முயற்சிக்கின்ற தமக்கு திடீரென 35 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் விலையால் பலத்த அடி விழுந்துள்ளதாக வடபகுதி மீனவர்கள் கூறுகின்றனர்.

இலங்கையில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் பெற்றொல் விலை 12 ரூபாயாலும் டீசல் விலை 31 ரூபாயாலும் மண்ணெண்ணெய் விலை 35 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டன.

மீனவர் பிரதிநிதிகள் கருத்து

எரிபொருள் விலை: சூடுபிடிக்கும் மீனவர் போராட்டம்

எரிபொருள் விலை அதிகரிப்பைக் கண்டித்து தென்னிலங்கை மீனவர்கள் நடத்தும் போராட்டம் அகில இலங்கை மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிப்பு

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இந்த விலையேற்றத்தால் போக்குவரத்து, கடற்தொழில, தோட்டத் தொழில் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரத்துக்கும் அதிகமான சிறிய ரக படகு மீனவர்கள் எரிபொருள் விலை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டிருப்பதாக

இலங்கை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ஹேர்மன் குமார தமிழோசையிடம் தெரிவித்தார்.

‘வீண்செலவு’

சர்வதேச விடயங்களை விலை அதிகரிப்புக்கு காரணம் காட்டும் அரசாங்கம், பெருங் கொண்டாட்ட நிகழ்வுகளுக்காக பெருமளவு பணத்தை வீணாக செலவு செய்துவிட்டு தொழிலாளர்களை சிரமத்தில் தள்ளுவதாகவும் ஹேர்மன் குமார சுட்டிக்காட்டினார்.

மீனவர்களுக்கு எரிபொருளை மானிய விலையில் தருவதாக அரசாங்கம் கூறுவதை நம்பமுடியாது என்றும் கடந்தகால அனுபவங்களை சுட்டிக்காட்டுவதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.

மன்னார், யாழ்ப்பாணம், வன்னி என வட இலங்கை மீனவர்களையும் எரிபொருள் விலை கடுமையாகப் பாதித்துள்ளதால் வடபகுதி மீனவர்களையும் போராட்டத்தில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழோசையிடம் கருத்துத் தெரிவித்த வட மாகாண கடற்தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் எஸ். தவரட்ணம், மண்ணெண்ணெய்யை பெரும்பாலும் நம்பியிருக்கின்ற வடபகுதி மீனவர்கள், தேசிய மட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களுடன் இணைந்து தமது கோரிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக கூறினார்.

இரான் மீதான சர்வதேசத்தின் தடைகளைக் காரணம் காட்டி அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரிப்பது மோசடி வேலை என இலங்கையின் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.