bbc.co.uk navigation

கொழும்பு தேயிலை மாநாடும் தேயிலைத் தொழிலாளர்களும்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 1 பிப்ரவரி, 2012 - 18:22 ஜிஎம்டி
தொழிலாளர் குடியிருப்பு

பெரும்பாலான தொழிலாளர் குடியிருப்புகளில் இன்னும் உரிய குடிநீர், மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உறுதிசெய்யப்படவில்லை

கொழும்பில் பெப்ரவரி 1 முதல் 3ம் திகதி வரை நடைபெற்றுக்கொண்டிருக்கும் சர்வதேச தேயிலை மாநாட்டில் 25 நாடுகளைச் சேர்ந்த சுமார் 170 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

‘உலகிலேயே தலைசிறந்த தேயிலை இலங்கையில் தான் கிடைக்கிறது’ என்பதை நிருபிப்பது தான் இந்த சர்வதேச மாநாட்டின் முக்கிய நோக்கம் என்று கொழும்பு சர்வதேச தேயிலை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் மைக்கல் ஜேடி சொய்சா பிபிசியிடம் கூறினார்.

தேயிலை மாநாடும் தொழிலாளர்களும்- பெட்டகம்

கொழும்பு தேயிலை மாநாடும் தேயிலை தொழிலாளர்களும்

கொழும்பு தேயிலை மாநாடு 2012: 'இலங்கைத் தேயிலைத் தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியம் கிடைப்பதாக கூறுவது தவறான பிரசாரம்': தொழிற்சங்கத் தலைவர்கள்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

பல ரகங்களில் பல சுவைகளில் கிடைக்கும் இலங்கைத் தேயிலைக்கு சர்வதேச சந்தையில் இருக்கும் கிராக்கியை இன்னும் அதிகரிப்பதற்கு இந்த சர்வதேச மாநாடு உதவும் என்று மாநாட்டின் ஏற்பாட்டாளர் மைக்கல் ஜேடி சொய்சா மேலும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு தேயிலை விற்பனையில் இலங்கை 1.5 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வருமானம் ஈட்டியதாகவும் அவர் பிபிசியிடம் கூறினார்.

'தவறான பிரசாரம்'

ஆனால் நிலைமை இப்படி இருக்க, மறுபுறத்தில் இந்த வருமானத்திற்கு காரணமாக இருக்கின்ற தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக குடியிருப்பு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உரிய முறையில் உறுதிப்படுத்தப்படாத நிலையில் பின்தங்கிய நிலையில் இருந்துவருகின்றார்கள்.

ஆனால், இலங்கையில் தேயிலை உற்பத்திச் செலவு மிக அதிகம் என்றும், அங்கு தொழிலாளர்களுக்கு கிடைக்கும் ஊதியம் வேறு எங்கும் கிடைப்பதில்லை என்றும் பிபிசியின் கேள்வியொன்று பதிலளிக்கையில் ஜேடி சொய்சா தெரிவித்தார்.

தோட்டப்புற பிள்ளைகள் கற்கும் பள்ளிக்கூடமொன்று

தோட்டப்புற பிள்ளைகள் கற்கும் பள்ளிக்கூடமொன்று

ஆனால், இலங்கையில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு மிக அதிகளவில் சம்பளம் கிடைப்பதாக கூறுவது தவறான பிரசாரம் என்று இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்ககள் கூட்டமைப்பின் செயலர் ஓ. ஏ. ராமையா தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியும் மத்திய கிழக்கு அரபு நாடுகளில் அண்மைக் காலங்களில் தொடரும் அரசியல் குழப்ப நிலைமைகளும் இலங்கைத் தேயிலை விற்பனை சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடையக் காரணம் என்றும் கொழும்பு தேயிலை மாநாட்டின் ஏற்பாட்டாளர் மைக்கல் ஜேடி சொய்சா பிபிசியிடம் கூறினார்.

இந்த நிலமைகள் இலங்கைத் தேயிலைத் தொழிலாளர்களின் சம்பளத்தைப் பாதிக்கும் என்று தேயிலை வர்த்தகர்கள் கடந்த காலங்களில் கூறியுள்ளனர்.

ஆனால் சந்தையில் ஏற்படும் இலாபங்கள் தொழிலாளர்களுக்கு பங்கிடாத வரையில், அதனால் ஏற்படும் நட்டங்களை மட்டும் தொழிலாளர்கள் மீது சுமத்த நினைப்பது நியாயமல்ல என்று தொழிற்சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

அவ்வாறே தேயிலையை சந்தைப் படுத்துவது வியாபாரிகளின் வேலையே தவிர அதனை தொழிலாளர்களின் சம்பளத்துடன் தொடர்புபடுத்த நினைப்பது தவறு என்றும் ஓ. ஏ.ராமையா தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.