ஐ.நா. அமைதிகாப்பு ஆலோசகராகிறார் சவேந்திர சில்வா

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 ஜனவரி, 2012 - 16:44 ஜிஎம்டி
சவேந்திர சில்வா

சவேந்திர சில்வா

இலங்கை அரசாங்கத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய இராஜதந்திரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

ஐ.நா.வின் தலைமைச் செயலரால் ஏற்படுத்தப்பட்ட அமைதிகாப்பு நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக் குழுவில் தான் பணியாற்றப்போவதாக முன்னாள் இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

அமெரிக்க வழக்கு ஒன்றில் இவர் சம்பந்தப்பட்டிருக்கிறார். 2009ல் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட இலங்கையின் இறுதிப் போரின்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இவர் மீது அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவர் அந்த குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார். சவேந்திர சில்வா தற்போது ஐநாவுக்கான துணைத் தூதுவராக பணியாற்றுகிறார்.

bbc.co.uk navigation

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.