
இலங்கை முஸ்லிம் ஒருவர்
விசா விதிகளை மீறிய காரணத்துக்காக 160 க்கும் அதிகமான இஸ்லாமிய மதகுருமார்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவது என்று இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
வெறுமனே சுற்றுலாப் பயணிகளுக்கான விசாக்களில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து வந்த இந்த மதகுருமார், அனுமதியில்லாமல் முஸ்லிம் சமூகத்தினருக்கும் மத போதனை செய்ததாக அரசாங்கம் கூறுகிறது.
இவர்களது வெளியேற்றம் குறித்த முடிவுகள் தொடர்பில், இலங்கை அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.








