
லலித் குமார் வீரராஜு
இலங்கையில் காணாமல் போன மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குறித்து புலனாய்வு செய்யுமாறு கோரி செயற்பாட்டுக் குழுக்கள் சில அங்குள்ள ஐநா பிரதிநிதிகளிடம் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.
சுமார் ஒரு மாதகாலத்துக்கு முன்னதாக காணாமல் போன லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகநாதன் ஆகியோர் குறித்து பதில் காணுமாறு மனித உரிமைகளுக்கான மாணவர்கள் என்னும் அமைப்பு கோரியுள்ளது.
காணாமல் போனவர்களின் குடும்பங்களின் சார்பாக இவர்கள் இருவரும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
காணாமல்போன இவர்களைக் கண்டுபிடிக்க தம்மால் ஆன அனைத்தையும் செய்வதாக அதிகாரிகள் கூறுகின்ற போதிலும், அவர்கள் பொலிஸ்காரர்களால்தான் கடத்தப்பட்டதாக அவர்களது ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.








