
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்
இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், கூட்டமைப்பினர் கடும்போக்கு நிலைப்பாடுடன் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
இதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சனிக்கிழமையன்று தன்னுடன் தொலைபேசியில் உரையாடிய போது தெரிவித்ததாக, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
"கூட்டமைப்பு குறித்து ஜனாதிபதி விமர்சனம்"
அரசுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் கூட்டமைப்பு கடும்போக்குடன் நடந்து கொள்வதாக ஜனாதிபதி கூறினார் என்கிறார் மனோ கணேசன்
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
தனது பிறந்தநாளின் போது வாழ்த்து தெரிவிக்க, தொலைபேசியில் அழைத்த ஜனாதிபதி, பேச்சுவார்த்தைகளின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகளைப் போல நடந்து கொள்கிறார்கள் என்றும், அவர்களை இனப்பிரச்சினை தீர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இடம்பெறும்படி தன்னைக் கூறச் சொன்னதாகவும் மனோ கணேசன் கூறுகிறார்.
எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்கக் கூடாது என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என்றும் அவர் சொல்கிறார்.
இருப்பினும், பேச்சுவார்த்தைகளில் கூட்டமைப்பினர் கடும்போக்கான நிலையையை கடைபிடிக்கிறார்கள் என்று ஜனாதிபதி கூறிய கருத்தை அவர்களிடம் தெரிவிக்கப் போவதாகவும் மனோ கணேசன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஜனாதிபதி கூறும் அனைத்தையும் தன்னால் செய்ய முடியாது என்றும் மனோ கணேசன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.








