bbc.co.uk navigation

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 டிசம்பர், 2011 - 16:40 ஜிஎம்டி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் காணாமல் போன லலித்குமார் மற்றும் அவரது சகா ஆகியோரைக் கண்டு பிடித்துத் தரவேண்டும் எனக்கோரி, ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார தலைமையில் இந்த இளைஞர்களின் உறவினர்கள் இன்று யாழ் பேரூந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

இவர்களுடன் ஏனைய காணாமல் போனவர்களின் உறவினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

அமைதியாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அங்கு வருகை தந்த யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவ, காணாமல் போனவர்களைக் கண்டு பிடிப்பதற்குத் தம்மால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

காணாமல் போனவர்களின் உறவினர்களின் சார்பில் முன்னர் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு ஏற்பாடுகளை செய்த வேளையில் ஜேவிபி அதிருப்தியாளர் குழுவின் ஆதரவாளர்களான இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்தில் காணாமல் போயிருந்தனர்.

பின்னர் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.