bbc.co.uk navigation

நெதர்லாந்தில் புலிகளுக்கு நிதி சேர்த்தவர்களுக்கு சிறை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 அக்டோபர், 2011 - 16:21 ஜிஎம்டி
விடுதலைப்புலிகள் ( ஆவணப்படம்)

விடுதலைப்புலிகள் ( ஆவணப்படம்)

நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்த 5 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இரண்டு முதல் ஆறு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் வாழும் புலம் பெயர் தமிழர்களை மிரட்டி பணம் பறித்ததாகவும், சிறார்களுக்கு குண்டுகளையும், கைக்குண்டுகளையும் வரையக் கற்றுக் கொடுத்து அவர்களை மூளை சலவை செய்ததாகவும் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

ஆனால் கைதானவர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் இந்த ஐந்து பேரும் மிக கொடுரமான இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசுக்கு எதிரான விடுதலைப் போராட்ட வீரர்கள் எனறு வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இவர்கள் மீது பயங்கவாத குற்றங்களுக்காக தண்டனை விதிக்கவில்லை. ஆனால் கிரிமினல் அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்தமைக்காக தண்டனை வழங்குவதாகக் கூறினார்.

இந்த வழக்கு குறித்து நெதர்லாந்தின் அரசு வழக்குத் தொடுனர் அலுவலகத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான விம் தி பிரிம் அவர்கள் தகவல் தருகையில் தண்டிக்கப்பட்டவர்களில் ஒருவர் 132 மில்லியன் யூரோக்கள் வரை உலகெங்கும் நிதி சேகரித்ததாகத் தெரிவித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு கைது செய்யப்படும் வரை இவர்கள் இவ்வாறான நிதி சேகரிப்பில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.