bbc.co.uk navigation

1800 முன்னாள் போராளிகள் விடுதலை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 30 செப்டம்பர், 2011 - 16:55 ஜிஎம்டி
முன்னாள் விடுதலைப்புலிகள் (ஆவணப்படம்)

முன்னாள் விடுதலைப்புலிகள் (ஆவணப்படம்)

இலங்கையில் புனர்வாழ்வுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 1800 முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் உறவினர்களிடம் கையளிக்கப்படும் நிகழ்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தனது அதிகார பூர்வ இல்லத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய ஜனாதிபதி முன்னாள் போராளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள மீள்வாழ்வு உலகுக்கே ஒரு முன் உதாரணமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டார்.

இலங்கையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. போர் முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு போரின் இறுதி கட்டத்தில் 11 600 க்கும் சற்று அதிகமான விடுதலைப் புலிகள் தம்மால் பிடிக்கப்பட்டார்கள் அல்லது சரணடைந்தார்கள் என்று அரசு அறிவித்தது.

தடுப்பில் வைக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு பயிற்சிகளை அளித்து அவர்களை கட்டம் கட்டமாக அரசு விடுவித்து வந்தது.

வழக்குகளை எதிர்கொள்ளும் 63 பெண்கள் உள்ளிட்ட சுமார் 1400 போராளிகளே தற்போது தடுப்பில் இருப்பதாகவும் அவர்களையும் விரைவாக விடுவிக்க அரசு முயற்சி மேற்கொள்வதாகவும் புனர்வாழ்வு மற்றும் சிறைத் துறை அமைச்சகத்தின் ஆலோசகர் சிவலிங்கம் சதிஷ்குமார் தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்ற வைபவத்தில் சுமார் 30 முன்னாள் போராளிகள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர். மற்றவர்கள் சனி மற்றும் ஞாயிறு தேதிகளில் உறவினர்களிடம் கையளிக்கப்படுவார்கள் என்றும் சதிஷ்குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.