
இலங்கை வரைபடம்
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையி;ல் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதியுத்தத்தின்போது போர்ப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்த 3 லட்சம் மக்களுக்கு மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் அரசாங்கம் அபயமளித்திருந்தது.
அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு இப்போது 7400 பேரளவிலேயே அங்கு மிஞ்சியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மனிக்பாம் முகாமில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி மோதல்கள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் கண்ணிவெடிகள் மற்றும் வெடிப்பொருட்கள் இருப்பதாகவும்.
அமைச்சர் முரளிதரன் பேட்டி
அமைச்சர் முரளிதரன் பேட்டி
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
இவற்றை அகற்றும் நடவடிக்கைகள் முற்றுப்பெறாத காரணத்தினால் இந்த மக்களை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கோம்பாவில் பகுதியில் இதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ள 600ஏக்கர் காணியில் குடியேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.
குடும்பம் ஒன்றிற்கு 40 பேர்ச் காணியும், அவற்றில் வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதுடன் அடிப்படை வசதிகள், வாழ்வாதாரத் தொழில் வசதிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
எனினும், மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் உள்ள மக்கள் இந்த ஏற்பாட்டினை விரும்பாதவர்களாகவே காணப்படுகின்றார்கள்.
கோம்பாவில் பகுதியில் புதிதாகச் சென்று குடியேறுவதிலும்பார்க்க ஏற்கனவே காணிகள், வீடுகளுடன் பூர்வீகமாக இருந்த தமது சொந்தக் கிராமங்களுக்குச் செல்வதையே தாங்கள் விரும்புவதாகவும், ஆயினும் தமது விருப்பமும் கோரிக்கையும் உரிய வகையில் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.








