bbc.co.uk navigation

ஆஸ்திரேலியா சென்ற சிலரைக் காணவில்லை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 18 செப்டம்பர், 2011 - 13:16 ஜிஎம்டி
ஆஸ்திரேலியா செல்லும் அகதிகள் படகு ஒன்று

ஆஸ்திரேலியா செல்லும் அகதிகள் படகு ஒன்று

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து சட்டவிரோதமாக இரண்டு வருடங்களுக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு சென்ற சிலரை இன்னமும் காணவில்லை என்று உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பயண முகவர்களிடம் 10 முதல் 20 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்து 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் இவர்கள் பயணித்ததாகவும், ஆனால், அவர்கள் சட்ட விரோதமாகவே அனுப்பி வைக்கப்பட்டதாக தமக்கு பின்னரே தெரியவந்ததாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

படகில் சென்றவர்களின் உறவுகளின் சோகம்

ஆஸ்திரேலியாவுக்கு கடலில் பயணமாகி காணமல் போனவர்கள் குறித்த பெட்டகம்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

கொழும்பில் இருந்து அவர்கள் சிங்கப்பூருக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய இடங்களில் இருந்து தொடர்புகொண்ட தமது உறவினர்கள், தாம் இந்தோனேசியா ஊடாக கடல்வழிப் பயணமாக ஆஸ்திரேலியா செல்லவுள்ளதாக தமக்கு தெரிவித்ததாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.

ஆனால் அதன் பிறகு அவர்களிடம் இருந்து தமக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

தமது கணவர்மாரை இவ்வாறு அனுப்பி வைத்த பல பெண்கள் தாம் இது குறித்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் உட்பட பல அமைப்புக்களிடம் முறையிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இப்படியான கடல் வழிப் பயணங்களில் பலர் நடுக்கடலில் உயிரிழந்தமை குறித்து ஏற்கனவே பல தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதியன்று இவ்வாறு கடல் வழிப்பயணத்தை ஆரம்பித்த 44 பேர் கல்முனையில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.