bbc.co.uk navigation

கொழும்பு சிறையில் தமிழ் கைதிகள் மீது தாக்குதல்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 செப்டம்பர், 2011 - 15:19 ஜிஎம்டி
தமிழ் கைதிகள் மீது தாக்குதல்

தமிழ் கைதிகள் மீது தாக்குதல்

இலங்கையில் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது சிங்கள கைதிகள் தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இத்தாக்குதலில் 6 தமிழ் கைதிகள் காயமடைந்ததாக அந்த தகவல்கள் கூறியுள்ளன.

கிரிமினல் குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள சிங்கள கைதிகளுடன் தமிழ் அரசியல் கைதிகளை தங்க வைப்பதாலேயே இத்தகைய சம்பவங்கள் நடப்பதாக பல தரப்பாலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இப்படியான ஒரு சம்பவம் அங்கு நடந்ததாக ஒப்புக்கொள்ளும் இலங்கை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகரும் பேச்சாளருமான, சிவலிங்கம் சதீஸ்குமார், அந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

இடப்பற்றாக்குறை காரணமாகவே இப்படியான சம்பவம் அங்கு நடந்ததாகக் கூறும் அவர், கொழும்பு சிறைச்சாலைகளில் உள்ள இடப்பற்றாக்குறையைப் போக்க கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.