முன்னாள் போராளிகள் தென்னிலங்கைக்கு சுற்றுலா

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 9 செப்டம்பர், 2011 - 17:23 ஜிஎம்டி
முன்னாள் போராளிகள்

முன்னாள் போராளிகள்

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த காலப்பகுதியில் அரச படைகளிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்றவர்கள் என்று கூறப்படும் விடுதலைப் புலி உறுப்பினர்களில் 525 பேர் நாட்டின் தெற்குப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

இம்மாதம் 19 திகதி விடுதலை செய்யப்படவுள்ள இந்த முன்னாள் போராளிகள் சிலரிடம், புனர்வாழ்வுக்குப் பொறுப்பாகவுள்ள அதிகாரிகளின் தொலைபேசியூடாக தமிழோசை தொடர்பு கொண்டு விபரம் கேட்டது.

முன்னாள் போராளிகளின் தென்னிலங்கை சுற்றுலா

முன்னாள் போராளிகள், புனர்வாழ்வு அதிகாரி செவ்வி

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு நடவடிக்கையில் ஈடுபடுத்திய பின் விடுதலை செய்வதாக அரசு கூறுகிறது.

இவ்வாறு சரணடைந்தவர்களில் தடுத்துவைக்கப்பட்ட 11, 699 முன்னாள் போராளிகளில் இதுவரை 9,000 பேர் வரை கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

எஞ்சியுள்ள சுமார் 3000 பேரில், நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சில நூற்றுக் கணக்கானவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் இம்மாத இறுதியில் விடுவிக்கப்படுவார்கள் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஸ்ட் ஆலோசகர் எம்.எஸ் சதீஸ்குமார் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலி போராளிகளை விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் அழுத்தங்களை எதிர்கொண்டிருக்கின்றது.

போரின் இறுதி்க்காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய ஐநா நிபுணர் அறிக்கை வெளியானதன் பின்னர், ஜெனிவாவில் அடுத்த வாரத்தில் நடைபெறவுள்ள ஐநாவின் மனித உரிமைகள் கவுண்சில் கூட்டத்தில் இலங்கை விவகாரம் பேசப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.