மிருக பலிக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 29 ஆகஸ்ட், 2011 - 18:01 ஜிஎம்டி
பிபிசி தமிழ்

பிபிசி தமிழ்

இலங்கையில் சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் வரும் 13ம் திகதியன்று நடைபெறவுள்ள மிருக பலி பூஜைக்கு உடனடியாக தடை விதிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நிராகரிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பான பிரதான மனு மீதான விசாரணையை அக்டோபர் 14ம் திகதிவரை ஒத்தி வைப்பதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எம்பிலியபிட்டியவைச் சேர்ந்த பௌத்த பதனம என்ற அமைப்பு உட்பட 14 பெளத்த அமைப்புகள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளன.

ஜாதிக்க ஹெல உறுமயவைச் சேர்ந்த அத்துரலியே ரத்தன தேரர், அரசிடமிருந்து தகுந்த அனுமதி பெறப்படாமல் செய்யப்படும் இந்த மிருக பலி மூலம் மற்ற மதத்தவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்தார்.

தடை விதிக்க மறுத்த நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் ரத்தன தேரர் கூறினார்.

அக்டோபர் 14ம் திகதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளை நீஜர் மன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.