BBC navigation

உறுப்புகளை இழந்தும் குறையாத ஊக்கம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 30 செப்டம்பர், 2013 - 13:45 ஜிஎம்டி
  • இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக உடல் உறுப்புகளை இழந்த நூற்றுக்கணக்கான முன்னாள் இராணுவ வீரர்கள், அவர்களுக்காக நடைபெற்ற ஒரு தடகளப் போட்டியில் பங்குபெற்றனர்.
  • இந்த விளையாட்டுப் போட்டி கொழும்பு சுகததாஸ விளையாட்டு அரங்கத்தில் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெற்றது.
  • சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தி நடக்கும் போட்டிகள் உட்பட பல போட்டிகளில், முன்னாள் படையினர் பங்குபெற்றனர்.
  • பார்வையற்றவர்கள் மற்றவர்களின் உதவியுடன் இந்தப் போட்டியில் பங்குபெற்றனர்.
  • இலங்கையில் உள்நாட்டு யுத்தம் காரணமாக உடல் உறுப்புகளை இழந்த சுமார் இருபதாயிரம் முன்னாள் படையினர் உள்ளதாக கருதப்படுகிறது.
  • இந்தப் போட்டியில், அரசால் அளிக்கப்பட்ட செயற்கை கால்களை அணிந்து கொண்டு பலர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டனர்.
  • அரசால் வழங்கப்படும் செயற்கை கைகால்கள் அடிக்கடி உடைந்து விடுகிறது எனவும், பாதிக்கப்பட்டுள்ள பல முன்னாள் படையினர் வேலையில்லாமல் இருப்பதால்அவற்றை வெளிச்சந்தையில் வாங்க முடியாமல் சிரமப்படுகிறார்கள் எனவும் முன்னாள் படையினர் கூறுகிறார்கள்.
  • ஆனால் அரசோ, முன்னாள் படை வீரர்களை தாங்கள் மறக்கவில்லை என்றும், புலிகளுடனான யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தக்க உதவிகள் வழங்கப்படும் எனவும் கூறுகிறது.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.