BBC navigation

டென்னிஸ்: தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜோகோவிச் ஆஸி. ஓபன் சாம்பியன்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 ஜனவரி, 2013 - 14:31 ஜிஎம்டி
வெற்றிக் கோப்பையுடன் ஜோகோவிச்

வருடத்தின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் பந்தயமான ஆஸ்திரேலிய ஓபனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நொவோக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஞாயிறன்று நடந்த இறுதியாட்டத்தில் பிரிட்டனின் அண்டி மர்ரியை நான்கு செட்களில் அவர் வீழ்த்தினார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சரித்திரத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அந்தப் பட்டத்தை வென்ற சாதனையை வேறு எந்த டென்னிஸ் வீரரும் இதுவரை செய்ததில்லை.

முதல் செட்டை டை பிரேக்கரில் ஜோகோவிச் இழந்தாலும், இரண்டாவது ஆட்டத்தை டை பிரேக்கரில் ஜோகோவிச் வென்றார்.

அதன் பின்னர் மூன்றாவது நான்காவது ஆட்டங்களில் ஜோவோவிச்சின் வேகத்துக்கும் நேர்த்திக்கும் மர்ரியால் ஈடுகொடுக்க முடியாமல் போனது.

இந்த வெற்றியின் மூலம் உலகத் தர வரிசையில் முதல் இடத்தையும் 25 வயது ஜோகோவிச் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

மர்ரியைப் பொறுத்தவரையில் மூன்றாவது தடவையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதியாட்டத்தில் அவரால் வெற்றி பெற முடியாமல் போயுள்ளது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பெலாருஷ்யாவின் விக்டோரியா அசெரெங்கா சீனாவின் லி னாவை வீழ்த்தி சாம்பியன் பாட்டம் வென்றார்.

ஜோகோவிச்சைப் போலவே அசெரெங்க்காவும் முதல் ஆட்டத்தை தோற்றாலும் பின்னர் சுதாரித்து விளையாடி எதிராளியை வீழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.