bbc.co.uk navigation

பாராலிம்பிக்கில் இலங்கை தனது முதல் பதக்கத்தை வென்றது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 6 செப்டம்பர், 2012 - 15:00 ஜிஎம்டி
 லண்டன் பாராலிம்பிக் போட்டிகளுக்கு வந்துள்ள இலங்கை வீரர்களும் பயிற்சியாளர்களும்

லண்டன் பாராலிம்பிக் போட்டிகளுக்கு வந்துள்ள இலங்கை வீரர்களும் பயிற்சியாளர்களும்

லண்டன் பாராலிம்பிக் போட்டிகளில் டி 46 குறைபாடுள்ளவர்களுக்கான 400 மீட்டர் ஆடவர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கையின் பிரதீப் சஞ்சய வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

பாராலிம்பிக் போட்டிகளைப் பொறுத்தவரை இலங்கையர் ஒருவர் வெல்லக்கூடிய முதல் பதக்கம் என்றால் அது இதுதான்.

49.28 விநாடிகளில் தூரத்தைக் கடந்து பிரதீப் சஞ்சய வெண்கலம் வென்றார்.

இலங்கை இராணுவத்தில் லான்ஸ் கொர்ப்போரல் நிலையில் இருக்கும் சிப்பாயான சஞ்சய, 2008ல் கிளிநொச்சியில் நடந்த ஒரு மோர்டார் குண்டுத் தாக்குதலில் வலது கரம் செயலிழந்து போனவர்.

"ஒலிம்பிக் போட்டிகளில் என்னால் ஒரு வெண்கலப் பதக்கமாவது நிச்சயம் வெல்ல முடியும் என்று எனது பயிற்சியாளர் திரும்பத் திரும்பக் கூறிவந்தார். வெற்றி பெற வேண்டும் என்று நானும் தீர்மானமாக இருந்தேன். எமது அணியின் சக வீரர்களும் எனக்கு மிகவும் உதவியாக இருந்தனர்." என்று பிரதீப் சஞ்சய பிபிசியிடம் கூறினார்.

BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.