bbc.co.uk navigation

லண்டன் பாராலிம்பிக்ஸ்:இந்தியாவுக்கு முதல் பதக்கம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 4 செப்டம்பர், 2012 - 09:38 ஜிஎம்டி

நாகராஜே கவுடா

லண்டனில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.

ஆடவருக்கான F 42 உயரம் தாண்டும் பிரிவில் கிரீஷா ஹோஸநகர நாகராஜேகவுடா இரண்டாம் இடத்தை பெற்றதோடு மட்டுமல்லாமல் இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பக்கத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நாகராஜே கவுடா 1.74 மீட்டர்கள் உயரம் தாண்டி வெள்ளி பதக்கத்தை வென்றார்.

இடது காலில் குறைபாடுள்ள அவர் சிசர்ஸ் டெக்னிக் எனும் முறையில் தாண்டி இந்தச் சாதனையை படைத்துள்ளார்.

இந்தப் பிரிவில் முதலிடத்தை ஃபிஜி நாட்டின் இலியேசா டெலானா வென்றார்.

வெண்கலப் பதக்கம் போலந்து நாட்டின் லுகாஸ் மாம்க்ஸ்ராச்சுக்கு கிடைத்தது.

இந்தியாவின் நாகராஜே கவுடாவும் ஃபிஜியின் இலியேசா டெலானாவும் ஒரே உயரமான 1.74 மீட்டர்கள் தாண்டினாலும், இலியேசா கவுடாவை விட குறைந்த வாய்ப்புகளையே பயன்படுத்தியதால் அவருக்கு முதலிடம் கிடைத்தது

BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.