bbc.co.uk navigation

ஈட்டி எறிதல் போட்டியில் விபரீதம்:ஒருவர் பலி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 ஆகஸ்ட், 2012 - 16:59 ஜிஎம்டி

முதியவர் பலி, சிறுவனுக்கு உளரீதியான தேற்றுதல்

ஜெர்மனியில் தடகள விளையாட்டுப் போட்டி ஒன்றில் நடுவராக பணியாற்றிக் கொண்டிருந்த ஒருவர், ஈட்டி எறிதல் போட்டியில் எறியப்பட்ட ஈட்டியால் பலியாகியுள்ளார்.

நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள டுசல்டர்ஃப் நகரில் இளஞர்களுக்காக இடம்பெற்ற ஒரு விளையாட்டுப் போட்டியின் போதே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

அந்தப் போட்டியில் 15 வயது இளைஞர் எறிந்த ஈட்டி, தடகளப் போட்டியில் நடுவராக பணியாற்றிக் கொண்டிருந்த 74 வயதானவரின் தொண்டையில் குத்தியதில் அவர் பலியானார்.

போட்டியில் ஈட்டியை எறிந்த சிறுவனை உளவியல் ரீதியாக தேற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறன.

இது ஒரு விபத்து போலவே தோன்றுகிறது என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தடகளப் போட்டிகளில் ஈட்டி எறிதல், சங்கிலி குண்டு எறிதல் போன்ற போட்டிகளில் நடுவர்களுக்கு எப்போதாவது காயம் ஏற்படுவது உண்டு என்றாலும், மரணம் சம்பவிப்பது மிக மிக அரிதானது என்று செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.