
நைஜீரிய அதிபர் குட்லக் ஜோனதன்
லண்டனில் நடந்து முடிந்த கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் நைஜீரியா ஒரு பதக்கம் கூட பெறாததை அடுத்து, நாட்டின் விளையாட்டுத்துறையை முற்றாக மாற்றியமைக்க அதிபர் குட்லக் ஜோனதன் உத்தரவிட்டுள்ளார்.
ஆப்பிரிக்காவிலேயே அதிக மக்கட்தொகை கொண்ட நாடான நைஜீரியா லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்காக தமது அணியினரின் தயார் படுத்தலுக்கு 15 மில்லியன் டாலர்களை செலவு செய்தது.
அதிபரின் திட்டத்தின்படி, அடுத்து ரியோ டி ஜெரீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தெளிவான இலக்குகளை நிர்ணயித்து, இனி குறிப்பிட்ட சில விளையாட்டுகளில் மட்டுமே கவனம் செலுத்தப்படும் என்று நைஜீரியாவின் தகவல்துறை அமைச்சர் லபரன் மகு தெரிவித்துள்ளார்.
முன்னர் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் நைஜீரிய வீரர்கள் ஒரு சில பதக்கங்களையவது வென்று நாடு திரும்பினர்.








