bbc.co.uk navigation

'ஒலிம்பிக்ஸ் உற்சாகம் பேரலிம்பிக்ஸை ஊக்கப்படுத்தும்'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 ஆகஸ்ட், 2012 - 14:15 ஜிஎம்டி

இந்த ஒலிம்பிக் போட்டிகளால் எல்லாரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும்,தமது அணியினர் பெற்ற வெற்றிகளால் பிரிட்டிஷ்காரர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியும்.

இதனால், இன்னும் மூன்று வாரங்களில் ஆரம்பிக்கவிருக்கும் மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் மிகவும் உற்சாகத்துடன் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கிடைத்த பதக்கங்களின் அளவு மாற்றுத் திறனாளிகளுக்கான பேரலிம்பிக்ஸ் போட்டிகளிலும் எதிரொலிக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்திருக்கின்றன.

ஒலிவடிவில் பெட்டகம்

'போட்டியை விளையாட்டரங்கில் பார்ப்பதே தனிதான்'

லண்டன் வாசிகள் மத்தியில் பரா ஒலிம்பிக்ஸுக்கான ஊக்கம் அதிகரித்து வருவதற்கான காரணங்களை ஆராயும் செய்திப் பெட்டகம்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இந்த போட்டிகள் ஏற்படுத்திய உற்சாகம், போட்டிகளை விளையாட்டரங்குக்குச் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை லண்டன் வாசிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதனால், டிக்கட் விற்பனையும் பேரலிம்பிக்ஸில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இவை குறித்து ஆராயும் பிபிசியின் செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.