bbc.co.uk navigation

மேரி கோம் தோல்வி, எனினும் வெண்கலப் பதக்கம் உறுதி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 ஆகஸ்ட், 2012 - 16:51 ஜிஎம்டி

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் மகளிருக்கான குத்துச் சண்டைப் பிரிவின் அரைறுதியில் இந்தியாவின் மேரி கோம் பிரிட்டனின் நிக்கொலா ஆடம்ஸிடம் தோல்வியடைந்துள்ளார்.

நிக்கோலா ஆடம்ஸ் மேரி கோமை 11-6 என்கிற புள்ளிக் கணக்கில் வென்றார்.

மகளிருக்கான 51 கிலோ ஃப்ளைவெயிட் பிரிவில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் மேரி கோம்

அவர் சாதாரணமாக 48 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடுவார்.

எனினும் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவு இல்லாததால், அடுத்த நிலையான 51 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டார்

மேரி கோம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரிலிருந்து வருபவர்.

29 வயதாகும் அவர் மகளிர் குத்துச் சண்டைப் போட்டியில் ஐந்து முறை உலகப் பட்டத்தை வென்றவர்.

ஐந்து அடி உயரம் மட்டுமே இருக்கும் மேரி கோம், 1999 ஆம் ஆண்டு முதலில் தடகள வீரராகத்தான் தனது விளையாட்டு வாழ்க்கையை ஆரம்பித்தார்.

வட்டு எறிதல் மற்றும் குண்டு எறிதல் ஆகிய விளையாட்டுகளிலிலேயே அவர் முதலில் ஆர்வம் காட்டினார்.

தான் ஒரு இந்தியர் என்பதே போட்டிகளின் போது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது என்று மேரி கோம் கூறியுள்ளார்.

மேரி கோமின் மகன்களுடன் பிபிசி செய்தியாளர்

தன்னை வித்தியாசமாக பார்த்த பலர், தான் ஜப்பானியர் அல்லது தாய்லாந்தைச் சேர்ந்தவர் என்று கூட பல எண்ணினர் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மிகவும் ஏழ்மையான ஒரு குடும்ப பின்ன்ணியைக் கொண்ட அவர், மிகவும் சிரமப்பட்டே சர்வதேச அளவுக்கு வளர்ந்துள்ளார்.

இரட்டை ஆண் குழந்தைகளின் தாயாரான அவர், போட்டிகளின் போது தனது குடும்பத்தாரையும், பிள்ளைகளையும் பிரிந்து இருப்பது வருத்தமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அரையிறுதிப் போட்டியில் மேரி கோம் தோல்வியடைந்தாலும், அவருக்கு ஒரு வெண்கலப் பதக்கம் கிடைக்கும்.

.

BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.