மாரத்தான்: இலங்கையின் கூரே ஒலிம்பிக்கிற்கு தகுதி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 ஏப்ரல், 2012 - 14:28 ஜிஎம்டி
வலப் பக்கத்தில் அனுராத இந்திரஜித் கூரே

வலப் பக்கத்தில் அனுராத இந்திரஜித் கூரே

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற இலங்கையின் மாரத்தான் ஓட்டர் வீரர் அனுராத இந்திரஜித் கூரே தகுதிபெற்றுள்ளார் என்பதை ஏற்கனவே நேயர்களுக்கு அறியத் தந்திருந்தோம்.

ஞாயிறன்று நடந்த 2012 லண்டன் மாரத்தான் பந்தயத்தில்2 மணி நேரம் 17 நிமிடங்கள் 50 வினாடிகளில் இவர் மாரத்தான் தூரத்தை ஓடி முடிந்திருந்தார்.

சாதாரணமாக ஒலிம்பிக்கில் பங்குபெற தகுதி பெறுவதற்கான நேரம் 2 மணி நேரம் 18 நிமிடங்கள் என்ற நிலையில், அதற்கு 10 வினாடிகள் குறைவான நேரத்தில் ஓடி இவர் தகுதி பெற்றுள்ளார்.

இலங்கை சார்பில் ஒலிம்பிக்கில் பங்குபெற இவருக்கு முன் தகுதி பெற்றிருப்பது இலங்கையின் பேட்மிண்டன் சாம்பியனான நிலுக கருணாரத்ன ஒருவர் மட்டுமே.

"கடந்த எட்டு ஆண்டுகளில் இலங்கையில் இருந்து ஒலிம்பிக்கில் பங்குபெற ஒரு தடகள வீரர் கூட தகுதி பெற்றிருக்கவில்லை என்ற நிலையில் இம்முறை நான் தகுதி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. உலக அரங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது குறித்து நிஜமாகவே மிகுந்த சந்தோஷம் அடைகிறேன்" என்று பிபிசியிடம் தெரிவித்திருந்தார் கூரே.

கூரே ஒலிம்பிக்கில் பங்கேற்பதென்பது இது இரண்டாவது முறை ஆகும்.

2004ஆம் ஆண்டு அதென்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிகின் மாரத்தான் பந்தயத்தில் அவர் முப்பதாவது இடத்தில் வந்திருந்தார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.