bbc.co.uk navigation

யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய்; அமெரிக்காவில் சிகிச்சை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 பிப்ரவரி, 2012 - 16:53 ஜிஎம்டி
யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவராக விளங்கிவரும் யுவராஜ் சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்ற வருடம் இந்தியா உலகக் கோப்பையைக் கைப்பற்றுவதில் முக்கிய பங்காற்றியிருந்த இந்த முப்பது வயது இடது கை வீரர், சென்ற மாதக் கடைசியிலிருந்து அமெரிக்காவில் கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார்.

சில காலம் முன்பு நுரையீரலில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அணியில் இருந்து விலகியிருந்த இவருக்கு வந்திருப்பது புற்று நோய் என அண்மையில்தான் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

யுவராஜ் சிங்கிற்கு வந்துள்ளது அரிய வகை புற்றுநோய் என்றாலும் அதனை முழுமையாக குணப்படுத்திவிட முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.