bbc.co.uk navigation

எனது ஒலிம்பிக் கனவு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 ஜனவரி, 2012 - 13:07 ஜிஎம்டி

எனது ஒலிம்பிக் கனவு

  • உசைன் போல்ட்
    "நான் இன்னும் சரித்திர நாயகன் என்ற ஒரு இடத்தை எட்டவில்லை. ஆனால் அதற்கான பாதையில்தான் நான் சென்று கொண்டுள்ளேன். லண்டனில் பங்கேற்கும்போது மக்களை வியப்பில் ஆழ்த்தும் மாபெரும் சாதனைகளை செய்து அந்த இடத்தை அடைய வேண்டும் என்பது என் கனவு." உசைன் போல்ட், ஜமைக்காவைச் சேர்ந்த குறுந்தூர ஓட்டப் பந்தய வீரர்
  • நாதெர் எல் மஸ்ரி
    "எனக்கு ஒரு பயிற்சியாளர் இருக்கிறார்தான். ஆனால் என் அளவுக்கு ஓடக்கூடிய சக வீரர்கள் எவரும் எங்கள் ஊரில் இல்லை. எனது பயிற்சிகளை நான் தனி ஆளாகத்தான் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது." நாதெர் எல் மஸ்ரி, காஸா பகுதியைச் சேர்ந்த நெடுந்தூர ஓட்டப் பந்தய வீரர். காஸா சார்பில் ஒலிம்பிக்கில் மாரத்தான் பந்தயங்களை ஓடவேண்டும் என்பது இவர் கனவு.
  • அலிஸ்டெர் பிரவுன்லீ
    "உலக சாம்பியன் என்ற நிலையை எட்டியது நிச்சயம் ஒரு விவரிக்க முடியாத விசேஷ உணர்வு. இதனை அனுபவித்து சொல்லக்கூடியவர்கள் உலகில் வெகு சிலர்தான். " டிரையத்லான் போட்டிகளில் இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரிட்டனின் அலிஸ்டெர் பிரவுன்லீ
  • ஹைதர் ரஷீத்
    "ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்புக்காக என்னுடைய எல்லா திறமையையும் காட்டி விளையாடுவேன். எனக்கு அந்த அவா இருக்கிறது." ஹைதர் ரஷீத், துடுப்பு படகு பந்தயத்தில் இராக் சார்பில் பங்கேற்க விரும்பும் வீரர்
  • ஒல்கா கார்லன்
    "தன் வாழ்நாள் முழுக்க முயற்சி செய்தும் கிடைக்காத சில திறமைகள் என்னிடம் இளம் வயதிலேயே இருப்பதாக என் தாத்தா அடிக்கடி சொல்லுவார்." யுக்ரைனைச் சேர்ந்த ஒல்கா கார்லன், வாள் விளையாட்டான ஃபென்சிங்கில் ஐரோப்பிய சாம்பியன் பட்டத்தை வென்ற இவர், உலக சாம்பியன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
  • மைலிண்டா கெல்மெண்டி
    "என் சொந்த நாடான கொசொவொவை விட்டு விட்டு வேறு நாட்டுக்காக வந்து விளையாடச் சொல்லி பல பெரிய நாடுகள் கேட்டன. ஆனால் நான் மறுத்து விட்டேன். கொசொவொவுக்காக விளையாடி எதனையும் சாதிக்க முடியாது என்று யாரும் என்னிடம் சொல்வதை நான் விரும்பவில்லை. அதை சாதித்துக் காட்டுவதே எனது லட்சியம்." மைலிண்டா கெல்மெண்டி, கொசொவொவைச் சேர்ந்த ஜூடோ வீராங்கனை. கொசொவொவை ஒலிம்பிக்கில் பிரதிநிதித்துவம் செய்யும் முதல் வீரராக ஆக இவர் விரும்புகிறார். அந்த நாட்டுக்கு உலக ஒலிம்பிக் சங்கம் அங்கீகாரம் வழங்கியிருக்கவில்லை என்பதால், இவர் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு குறைவுதான்

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.