நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (3.5 எம்பி)

ஜிஎஸ்எல்வி மூலம் இந்தியா சாதித்தது என்ன?

5 ஜனவரி 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:04 ஜிஎம்டி

விண்ணில் சீறிப்பாயும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்

மிகவும் குறைந்த வெப்ப நிலையில் உள்ள எரிபொருளைப் பயன்படுத்தி, இந்தியா உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்த ஜி எஸ் எல் வி ராக்கெட்டின் உதவியுடன் ஒரு செயற்கைக் கோளை விண்ணில் ஏவியுள்ளது ஒரு பெரிய சாதனையாகக் கூறப்படுகிறது.

சிக்கல் மற்றும் சவால்கள் நிறைந்த இந்தத் தொழில்நுட்பம் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் (ஐரோப்பிய ஒன்றியக் அறிவியல் கூட்டமைப்பின் சார்பில்) ஆகிய நாடுகளிடம் மட்டுமே இருந்தது.

இப்போது ஆறாவதாக இந்தியாவும் இந்தத் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளமை, சர்வதேச அளவில் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மற்றும் வல்லமையில் மீதுள்ள நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என்று பெங்களூருவிலுள்ள அறிவியல் எழுத்தாளர் மோகன் சுந்தரராஜன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஆக்ஸிஜென் மற்றும் ஹைட்ரஜன் ஆகிய வாயுக்களை பூச்சியம் பாகைக்கு கீழே மிகவும் குறைந்த வெப்ப நிலையில் திரவ நிலைக்கு கொண்டுவந்து பின்னர் அதை எரியூட்டி மிகவும் உயர்ந்த வெப்பநிலையின் மூலம் உந்துசக்தியை ஏற்படுத்தி ஒரு ராக்கெட் மூலம் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானதும் சவாலானதுமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றியின் மூலம் இனிவரும் காலங்களில் வர்த்தக ரீதியில் பல நாடுகளின் மேலும் பல செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி தொழில்நுட்பத்தின் மூலம் விண்ணில் செலுத்தும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் மோகன் சுந்தரராஜன் கூறுகிறார்.