அழிவின் விளிம்பில் ஊர்வன வகை உயிரினங்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 பிப்ரவரி, 2013 - 18:20 ஜிஎம்டி

இலங்கையில் அழிவின் விளிம்பில் இருக்கும் ராட்சதப் பல்லி ஒன்று

ஊர்வன வகை உயிரினங்கள் பெரும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஊர்வன வகைகளில் ஐந்தில் ஒன்று அழிந்து போகும் ஆபத்தான நிலையில் உள்ளதாக லண்டனிலுள்ள உயிரியல் கழகத்தின் ஆய்வாளர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

பல ஆமை இனங்களும் அழிவில் விளிம்பில் உள்ளன.

விவசாய நிலங்களின் அதிகரிப்பு, கணக்கு வழக்கில்லாமல் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவது, தேவைக்கு அதிகமான அளவில் வேட்டையாடப்படுவது ஆகிய காரணங்களினால் வாழ்விடங்கள் குறைந்து போனதே இந்த ஊர்வன வகைகளின் அழிவுக்கு முக்கிய காரணம் என அந்த ஆய்வு கூறுகிறது.

முதலைகள், பல்லிகள், ஆமைகள், பாம்புகள் உட்பட 19 வகையான ஊர்வன வகைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளன என்றும், அச்சுறுத்தலான சூழலில் வாழும் அவற்றில் பத்தில் ஒரு பங்கு அழிவின் விளிம்பில் உள்ளதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

முதலைகளும் அழிவிலிருந்து தப்பவில்லை

இந்த ஆய்வறிக்கையை எழுதியுள்ள டாக்டர் மோனிக்கா போஹ்ம், சுற்றுச் சூழல் மாற்றங்கள் ஊர்வன வகைகளை வெகுவாக பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.

உலகளவில் இருநூறு வல்லுநர்களால் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆயிரத்து ஐநூறு வகையான ஊர்வன உயிரினங்களை ஆராய்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உலகளவில் 9,500 வகைகளுக்கு மேலான ஊர்வன உயிரினங்கள் உள்ளன.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.