bbc.co.uk navigation

காண்டா மிருகங்கள் பாதுகாப்பு ஏற்பாடு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 நவம்பர், 2011 - 12:30 ஜிஎம்டி
  • அழிவின் விளிம்பில் உள்ள உயிரினமான கருப்பு காண்டாமிருகங்கள் சிலவற்றை தென்னாப்பிரிக்காவில் கேப் பிராந்தியத்தின் கிழக்கு பகுதியிலிருந்து லிம்போபோ பிராந்தியத்துக்கு நூதனமான வழியில் கொண்டு சென்று விடுகின்ற பணியை WWF சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு என்ற அமைப்பு செய்துள்ளது.
  • இந்த விலங்குகள் 1500 கிலோமீட்டர்களுக்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
  • காண்டா மிருகங்களுக்கு முதலில் மயக்க மருந்து கொடுத்து, பின்னர் காலில் கையிறு கட்டி ஹெலிகாப்டர்களில் சிறிது தூரம் தூக்கிச்சென்று டிரக் வண்டிகளில் ஏற்றப்பட்டு இவை இடம் மாற்றப்பட்டுள்ளன.
  • வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில் இருந்து காண்டா மிருகங்களைக் காப்பாற்றுவதற்காக இந்த உத்தியை மிருக வைத்தியர்கள் கையாண்டுள்ளனர்.
  • ஹெலிகாப்டர்களில் தூக்கிச் சென்று காண்டா மிருகங்களை டிரக் வண்டிகளில் ஏற்றுவதால் அவற்றுக்கு குறைந்த அளவில் மயக்க மருந்து கொடுத்தால் போதுமாகிறது.
  • காண்டா மிருகங்களை சட்டவிரோத வேட்டைக்காரர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக இந்த நூதன வழி கையாளப்பட்டுள்ளது.

More Multimedia

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.