BBC navigation

"ஆஸ்பிரின் மருந்து வயிற்றுப் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கிறது"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 அக்டோபர், 2011 - 15:17 ஜிஎம்டி
 ஆஸ்பிரின்

வலி நிவாரணியான ஆஸ்பிரின் மாரடைப்பு ஆபத்தை குறைப்பதாக முன்னரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வயிற்றில் புற்று நோய் வருவதற்கான ஆபத்து அதிகம் கொண்டவர்கள் தினமும் ஆஸ்பிரின் மருந்தை உட்கொண்டு வந்தால் அவர்களுக்கு அவ்வகை புற்றுநோய் வருவதற்கான ஆபத்து குறைகிறது என புதிய ஆராய்ச்சி ஒன்று சொல்கிறது.

வயிற்றுப் புற்றுநோய் வந்தவர்கள் வழித்தோன்றிய நபர்களுக்கு சுமார் இரண்டு ஆண்டுகள் காலகட்டத்துக்கு தினமும் இரண்டு ஆஸ்பிரின் மாத்திரைகளை கொடுத்து வந்ததில் அவர்களுக்கு அவ்வகை புற்றுநோய் வருகின்ற ஆபத்து அறுபது சதவீதம் குறைந்தது என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வு முடிவுகள் தி லான்செட் என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியாகியுள்ளன.

மாரடைப்பு ஆபத்தையும் , இரத்த ஓட்ட பிரச்சினைகளையும் குறைக்க ஆஸ்பிரின் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடச்சொல்லி ஏற்கனவே மருத்துவர்கள் பலர் பரிந்துரைத்து வருகின்றனர்.

ஆஸ்பிரின் மருந்து சிலருக்கு மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தவல்லது என்பதும் மருத்துவர்கள் அறிந்த விடயம்தான்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.