|
கப்பல் அகதிகள்- புதிய ஒப்பந்தம் கைச்சாத்து
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மலேஷியாவுக்கும் ஒஸ்ட்ரேலியாவுக்கும் இடையே இன்று திங்களன்று கைச்சாத்தாகியுள்ள தஞ்சங் கோருவோர் தொடர்பான புதிய உடன்படிக்கை மனித
உரிமை அமைப்புகளின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
தனது கடற்பரப்புக்குள் படகு மூலம் நுழைய முயற்சிக்கும் குடியேறிகளை தடுக்கும் முயற்சியாக ஒஸ்ட்ரேலியா இந்த உடன்படிக்கைக்கு வந்துள்ளது. மலேஷியா அகதிகளை மிக மோசமாகவே பராமரிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது. தஞ்சங்கோரிகளாக பிடிபடுவர்கள், ஏற்கனவே ஆட்கள் நிரம்பி வழியும் தடுப்பு முகாம்களுக்கே அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அனேகமானோர் குடியேற்றச் சட்டங்களை மீறியதற்காக கடுமையான தண்டனைகளையும் அனுபவிக்க வேண்டி ஏற்படுகின்றது. மனித உரிமை அமைப்புகள் கண்டனம்
தாம் அக்கறை எடுக்காதுள்ள, படகுகளில் வந்து குடியேற முயலும் மக்களை அனுப்புவதற்கான ஒரு ஒதுக்குப்புறமாகவே ஒஸ்ட்ரேலியா மலேஷியாவைப் பயன்படுத்துவதாக ஹியுமன் ரைட்ஸ் வொட்ச் அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது. மற்ற நாடுகளில் சென்று குடியேறக் காத்திருக்கின்ற சுமார் 93 பேர் வரையில், அனேகமாக பர்மா மற்றும் இலங்கையைச் சேர்ந்த அகதிகள், மலேஷியாவில் தற்போது இடைத் தங்கியிருக்கின்றனர், இங்கிருந்து தான் மிகவும் அபாயகரமான, ஒஸ்ட்ரேலியா போன்ற நாடுகளை நோக்கிய படகுப் பயணத்தையும் பெரும்பாலானவர்கள் ஆரம்பிக்கின்றனர். ஒஸ்ட்ரேலியாவுக்கு 4000 பேர்- மலேஷியாவுக்கு 800 பேர் புதிய உடன்படிக்கையின் படி, ஒஸ்ட்ரேலிய கடற்பரப்பை எட்டுகின்ற அடுத்த 800 பேர் மலேஷியாவுக்கு அனுப்பிவைக்கப்பட இருக்கிறார்கள். பதிலுக்கு செல்லுமிடம் தெரியாது, மலேஷியாவில் தடுப்பு முகாம்களிலுள்ள ஆயி்ரக்கணக்கானோரில், நாலாயிரம் பேரை மட்டும், ஆண்டுக்கு ஆயிரம் பேர் என்ற கணக்கில் நான்கு ஆண்டுகளுக்கு ஒஸ்ட்ரேலியா ஏற்றுக்கொள்ள இருக்கின்றது. இரண்டு நாடுகளுக்குமிடையிலான இந்த உடன்பாடு, எவரும் தஞ்சங்கோரி ஒஸ்ட்ரேலியாவுக்குள் நுழையமுடியாத நிலையை ஏற்படுத்தும் என்பதால் ஆட்களை வெளிநாடுகளுக்கு கடத்தும் தொழிலில் ஈடுவோரின் வலையமைப்பையும் முறியடிக்க இது உதவும் என அதிகாரிகள் நம்புகின்றனர். |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||